வலம்புரி கவிதா வட்டத்தின் 43 வது கவியரங்கு 3-11-2017 அன்று நடைபெற்றபோது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் வாழைத்தோட்டம் எம் வஸீருக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் -
என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்.
அன்று முதல் எம்மோடு வந்தான்
இவன்
தன் ஆற்றல் தனைக் காட்டி
எம் நெஞ்சை வென்றான்
திறக்காதா வகவத்தின் கதவு
மீண்டும்
என்றிவனும் ஏங்கித்தான் எம்மைப்போல் தவித்தான்
கவிதை யையே உள்ளமெல்லாம்
வைத்தான்
காண்கின்ற பொருளையெல்லாம்
கவித்துவமாய் பார்த்தான்
கடினமென நினைக்காமல்
மரபை
நண்பரிடம் ஆவலுடன் ஆசையுடன் கற்றான்
வாழைத் தோட்டத்து மைந்தன்
வாஞ்சையுடன் வகவத்தை யே மதிக்கும் கவிஞன்
வேலை பல பொறுப்புடனே
இருந்தும்
வகவமென்றால் வேட்கையுட னே
வருவான் என்றும்
வாழைத்தோட்டத்து வஸீர்தான்
தலைமை யினை தானேற்க
வந்ததுவே குஷிதான் - கவிதை
மாலையோடு வருகின்ற
கவிஞர்
தம்மோடு தான் சேர்த்து
மறக்க வைப்பான் பசிதான்
கவிஞர் எம். வஸீர்
கவியரங்கு உங்களிடம்
காட்டிடுங்கள் உங்கள் இடம்!
என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்.
அன்று முதல் எம்மோடு வந்தான்
இவன்
தன் ஆற்றல் தனைக் காட்டி
எம் நெஞ்சை வென்றான்
திறக்காதா வகவத்தின் கதவு
மீண்டும்
என்றிவனும் ஏங்கித்தான் எம்மைப்போல் தவித்தான்
கவிதை யையே உள்ளமெல்லாம்
வைத்தான்
காண்கின்ற பொருளையெல்லாம்
கவித்துவமாய் பார்த்தான்
கடினமென நினைக்காமல்
மரபை
நண்பரிடம் ஆவலுடன் ஆசையுடன் கற்றான்
வாழைத் தோட்டத்து மைந்தன்
வாஞ்சையுடன் வகவத்தை யே மதிக்கும் கவிஞன்
வேலை பல பொறுப்புடனே
இருந்தும்
வகவமென்றால் வேட்கையுட னே
வருவான் என்றும்
வாழைத்தோட்டத்து வஸீர்தான்
தலைமை யினை தானேற்க
வந்ததுவே குஷிதான் - கவிதை
மாலையோடு வருகின்ற
கவிஞர்
தம்மோடு தான் சேர்த்து
மறக்க வைப்பான் பசிதான்
கவிஞர் எம். வஸீர்
கவியரங்கு உங்களிடம்
காட்டிடுங்கள் உங்கள் இடம்!