எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 29 ஜனவரி, 2016

கவிஞர் முல்லை வீரக்குட்டி




வகவத்தின் 24வது கவியரங்கு 23/01.2016 அன்று இடம்பெற்றபோது கவியரங்கை கவிஞர் கலாபூஷணம் முல்லை வீரக்குட்டி தலைமையேற்று நடத்தினர். கவிஞர் முல்லை வீரக்குட்டி இதற்கு முன்பு வலம்புரி கவிதா வட்டத்தின் கவியரங்கில் கலந்து க்நோடவர் அல்ல. கவியரங்கை தலைமையேற்று நடத்துமாறு நன் அவருக்கு இவ்வாறு அழைப்புவிடுத்தேன்.
                                          
 - என். நஜ்முல் ஹுசைன்


தமிழ் கவிதை உலகினிலே
தனக்கென்றோர் இடம்பிடித்து
தலை நிமிர்ந்து நிற்கும் ஓர்
தகை சார்ந்த கவிஞர் இவர்

பத்திரிகை வானொலியில்
பக்குவமாய் இடம் பிடித்து
வித்துவத்தைக் காட்டியவர்
வீணர்களைச் சாடியவர்

சமுதாய அவலத்தை
சரித்திரத்தில் அழிப்பதற்கு
தமதெழுத்தை ஆயுதமாய்
தான்ஆக்கிக் காட்டியவர்

முற்போக்கு எழுத்தாளர்
சர்வதேச அரங்கினிலே
முனைப்போடு தானேறி
முழங்கியவர் தன்கவிதை

பரிசில்கள் பாராட்டு
என்றேதான் குவித்தாலும்
விரிசல்கள் இல்லாத
நட்போடு பழகுபவர்

அம்புவில் என வளைந்து
சொல்லெடுத்து விளையாடும்
தம்பிலுவில் தந்த
தமிழ் நெஞ்ச கவிஞர் இவர்

தூரத்தில் இருந்தேதான்
பார்த்திருந்தார் வகவத்தை
பாரத்தை இவர் தலையில்
வைப்போமே என்றெண்ணி
ஆரத்தழுவித்தான் அழைத்ததுவே இக் கவியை

கவிஞர்
முல்லை வீரக்குட்டி - எங்கள்
சொல்லை ஓரங்கட்டி
சென்றிடவே மாட்டார் என்ற
தைரியத்தில் தான் அழைத்தோம்

கவிஞர் முல்லை வீரக்குட்டி அவர்களே

எங்கள் வகவக் கவியரங்கை
உங்கள் தலை மேலே
தூக்கி வைத்தோம்  -

வகவ
கவிஞருடன் கைகோத்து
எங்கள் கவி தாகம்
போக்கி வைப்பீர் கள்
என்ற
நம்பிக்கையில்.............. !

செவ்வாய், 12 ஜனவரி, 2016

கிண்ணியா அமீர் அலி




வலம்புரி கவிதா வட்டத்தின்  17  வது   கவியரங்குக்கு தலைமை தாங்க சந்தக் கவிமணி கிண்ணியா அமீர் அலியை நான் இவ்வாறு அழைத்தேன்.  அன்றைய கவியரங்கு ஒலி வாங்கி இல்லாமலேயே நடைபெற்றது
 - என். நஜ்முல் ஹுசைன்

சுந்தரத்துத் தமிழெடுத்து
சந்தனத்திலே கலந்து
சந்தத்திலே அதைக் குழைக்கும்
சொல்லான்
கவிதையன்றி வேறெதையும்
சொல்லான்

கண்மூடி கண்திறக்கும்
வேளையெல்லாம் கவிதையிலே
தனைமறந்து வான்பறந்து நிற்பான்

அதை
கோல்எடுத்து
எங்களிடம் பகிர்வான்

எங்களிடமுள்ளது அலுமாரி
இவனிடமோ எலிமாரி
அலுமாரியில் வளர்த்தான் எலி
தோளிலே வளர்த்தான் கிளி
நெஞ்சிலே வளர்த்தான்
கொஞ்சம் கிலி

என்றாலும்
என்றுமே தமிழ் வளர்க்கத்தான்
முன்னின்றான் அமீர் அலி
கிண்ணியா அமீர்அலி
சந்தனக் கவியே
சந்தக்கவியே அமீர் அலி
வகவம் இன்றுன்னை
தலைமைக்கே அழைத்தது
எனினும்
வாய்மைக்குத் தரவில்லை

பொய்மைக்கும், வாய்மைக்கும் இடையே
பின்னுகின்ற
கவிமைக்கைக் கொண்டவனே
உனக்கெதற்கு வாய் மைக்கு என்று
அம்மைக்கைத் தரவில்லை

நீ
இம்மைக்கும், மறுமைக்கும் என்று
கவியரங்கை நடத்து……………..

ஒலிவாங்கித் தரவில்லை என்றாலும்
எங்கள்
கை ஒலி
வாங்கிச் செல்……………..