வலம்புரி கவிதா வட்டத்தின் 17 வது கவியரங்குக்கு தலைமை தாங்க சந்தக் கவிமணி கிண்ணியா அமீர் அலியை நான் இவ்வாறு அழைத்தேன். அன்றைய கவியரங்கு ஒலி வாங்கி இல்லாமலேயே நடைபெற்றது
- என். நஜ்முல் ஹுசைன்
சுந்தரத்துத் தமிழெடுத்து
சந்தனத்திலே கலந்து
சந்தத்திலே அதைக் குழைக்கும்
சொல்லான்
கவிதையன்றி வேறெதையும்
சொல்லான்
கண்மூடி கண்திறக்கும்
வேளையெல்லாம் கவிதையிலே
தனைமறந்து வான்பறந்து நிற்பான்
அதை
“ கோல்” எடுத்து
எங்களிடம் பகிர்வான்
எங்களிடமுள்ளது அலுமாரி
இவனிடமோ எலிமாரி
அலுமாரியில் வளர்த்தான் எலி
தோளிலே வளர்த்தான் கிளி
நெஞ்சிலே வளர்த்தான்
சந்தனத்திலே கலந்து
சந்தத்திலே அதைக் குழைக்கும்
சொல்லான்
கவிதையன்றி வேறெதையும்
சொல்லான்
கண்மூடி கண்திறக்கும்
வேளையெல்லாம் கவிதையிலே
தனைமறந்து வான்பறந்து நிற்பான்
அதை
“ கோல்” எடுத்து
எங்களிடம் பகிர்வான்
எங்களிடமுள்ளது அலுமாரி
இவனிடமோ எலிமாரி
அலுமாரியில் வளர்த்தான் எலி
தோளிலே வளர்த்தான் கிளி
நெஞ்சிலே வளர்த்தான்
கொஞ்சம் கிலி
என்றாலும்
என்றுமே தமிழ் வளர்க்கத்தான்
முன்னின்றான் அமீர் அலி
கிண்ணியா அமீர்அலி
சந்தனக் கவியே
சந்தக்கவியே அமீர் அலி
வகவம் இன்றுன்னை
தலைமைக்கே அழைத்தது
எனினும்
வாய் “மைக்”குத் தரவில்லை
பொய்மைக்கும், வாய்மைக்கும் இடையே
பின்னுகின்ற
கவிமைக்கைக் கொண்டவனே
உனக்கெதற்கு வாய் மைக்கு என்று
அம்மைக்கைத் தரவில்லை
நீ
இம்மைக்கும், மறுமைக்கும் என்று
கவியரங்கை நடத்து……………..
ஒலிவாங்கித் தரவில்லை என்றாலும்
எங்கள்
கை ஒலி
வாங்கிச் செல்……………..
என்றுமே தமிழ் வளர்க்கத்தான்
முன்னின்றான் அமீர் அலி
கிண்ணியா அமீர்அலி
சந்தனக் கவியே
சந்தக்கவியே அமீர் அலி
வகவம் இன்றுன்னை
தலைமைக்கே அழைத்தது
எனினும்
வாய் “மைக்”குத் தரவில்லை
பொய்மைக்கும், வாய்மைக்கும் இடையே
பின்னுகின்ற
கவிமைக்கைக் கொண்டவனே
உனக்கெதற்கு வாய் மைக்கு என்று
அம்மைக்கைத் தரவில்லை
நீ
இம்மைக்கும், மறுமைக்கும் என்று
கவியரங்கை நடத்து……………..
ஒலிவாங்கித் தரவில்லை என்றாலும்
எங்கள்
கை ஒலி
வாங்கிச் செல்……………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக