எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

கவிஞர் ஏ. கே. இளங்கோ

 வலம்புரி கவிதா வட்டத்தின் 74 ஆவது கவியரங்கம் 18/11/2021 அன்று நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமை தாங்கி நடாத்த கவிஞரும் கலைஞருமான ஏ. கே. இளங்கோ அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.


- என். நஜ்முல் ஹுசைன்

தலைவர்,

வலம்புரி கவிதா வட்டம்

(வகவம்)


தமிழ் உணர்வோடு இங்கு வந்து 

மனங் கவர்ந்தான்

தன் உறவெனவே எமை நினைத்து பின் தொடர்ந்தான்

அமிழ்ந்தேதான் கலையுலகில் இருந்தாலும்

கவியுலகில் பெயர் வைக்க 

முடிவு கொண்டான்

எமை மயக்கும் வண்ணம் இவன் தமிழெடுத்து

எழிலான கவிதை களால் 

எமை கவர்ந்தான்

சுமை என்றே நினைக்காமல் கவியரங்க 

தலைமைக்கே தயார் என்றே 

முன் வந்தான்


பண்பட்ட ஒரு கலைஞன் 

தலைநகரில்

பெயர் பெற்றே இருக்கின்றான்

தொலைக்காட்சி

விண்தொட்ட சினிமாவில் பங்களிப்பை 

செய்கின்றான் அதனோடு

புண்பட்ட கலைஞர் நிலை தானுயர்த்தும்

பெரும் பணியில் கூட இவன்

இருக்கின்றான்


இளங் கோவாய் முடி சூடி

இருக்கின்ற

இளங்கோவே இன்று எங்கள்

தலைமைக்கு

வளங் கொழிக்கும் தமிழ் எடுத்து

பண் பாட 

நம் கவிஞரொடு படையெடுத்து

வருகின்றான்

களம் இதிலே விளையாடி நற்கவிதை

காதுகளில் பாய்வதற்கே செய்து எங்கள்

வலம்புரிக்கே வளம் சேர்ப்பான்

வாழ்த்தி மகிழ்வோம்.


கவிஞர் ஏ. கே. இளங்கோ

இன்றைய கவியரங்கத் தலைமையை

தந்து நின்றோம்

எங்கள்

கவிஞர்க்கே அணி சேர்த்தால்

மகிழ்வு கொள்வோம் !