வலம்புரி கவிதா வட்டத்தின் 48 வது கவியரங்கு 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்புஅல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமை தாங்கி நடாத்த பன்னூலாசிரியர் கவிஞர் கலாபூஷணம் பாணந்துறை எம். பி. எம். நிஸ்வான் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் -
என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம்
பல பட்டம் பெற்ற திவர் எழுத்து - அவை
கனியாகி இருக்கிறதே பழுத்து
உலவிடுவார் நெஞ்சத்தில் இனித்து - இன்றும்
இலக்கியத்தில் நல்ல இடம் பிடித்து
வயதாகவே இல்லை இவர்க்கு - இவர்
வாய்வீச்சும் அழைக்கிறதே போர்க்கு
அயர்வகற்றும் இவர் கவிதை பலர்க்கு - எனினும்
இவரை நாம் ஒப்பிடலாம் மலர்க்கு
காதிநீதி பதியான மனிதர் -பல
நீதிக் கதைகளில் மிளிரும் புனிதர்
போதனையால் பிணக்குகளை நீக்கி - பிரிந்தோர்
பலபேரை சோ;த்து வைத்த சித்தர்
கூர்மதியோ டியங்குகின்ற ஒரு மான் - கொள்கைகளை
செய்திடவே மாட்டாரே குர்பான்
பேர் இவரும் வைத்தாரே இன்ஸான் - சுறுசுறுப்பாய்
இயங்குபவர் பாணந்துறை நிஸ்வான்
வந்தாரே கவியரங்கை ஏற்க - தன்
கவியாலே கவிஞர்களை தூக்க
பாணந்துறை நிஸ்வானை கேட்க
தயாராவோம்; துன்பங்கள் போக்க
கவிஞர் கலாபூஷணம்
எம்.பி.எம். நிஸ்வான்
இனி கவியரங்கு உங்களுக்கு
தமிழ் இன்பம் எங்களுக்கு!
என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம்
பல பட்டம் பெற்ற திவர் எழுத்து - அவை
கனியாகி இருக்கிறதே பழுத்து
உலவிடுவார் நெஞ்சத்தில் இனித்து - இன்றும்
இலக்கியத்தில் நல்ல இடம் பிடித்து
வயதாகவே இல்லை இவர்க்கு - இவர்
வாய்வீச்சும் அழைக்கிறதே போர்க்கு
அயர்வகற்றும் இவர் கவிதை பலர்க்கு - எனினும்
இவரை நாம் ஒப்பிடலாம் மலர்க்கு
காதிநீதி பதியான மனிதர் -பல
நீதிக் கதைகளில் மிளிரும் புனிதர்
போதனையால் பிணக்குகளை நீக்கி - பிரிந்தோர்
பலபேரை சோ;த்து வைத்த சித்தர்
கூர்மதியோ டியங்குகின்ற ஒரு மான் - கொள்கைகளை
செய்திடவே மாட்டாரே குர்பான்
பேர் இவரும் வைத்தாரே இன்ஸான் - சுறுசுறுப்பாய்
இயங்குபவர் பாணந்துறை நிஸ்வான்
வந்தாரே கவியரங்கை ஏற்க - தன்
கவியாலே கவிஞர்களை தூக்க
பாணந்துறை நிஸ்வானை கேட்க
தயாராவோம்; துன்பங்கள் போக்க
கவிஞர் கலாபூஷணம்
எம்.பி.எம். நிஸ்வான்
இனி கவியரங்கு உங்களுக்கு
தமிழ் இன்பம் எங்களுக்கு!