புதன்கிழமை
கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடாத்த
கவிஞர் எஸ். தனபாலன் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் - என்.
நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்
உணர்வோடு கவி எழுதி
உள்ளம் கவர்வான்
மணக்கின்ற சொல் லெடுத்து
மகிழச் செய்வான்
கணக்கின் றியே நட்பைப் பகிரச் செய்து
இணக்கம் தான் உயர்வென்று
உரத்துச் சொல்வான்
ஓடையது சலசலக்கும் பாடல் எழுதி
ஓராயிரம் உள்ளம் கவர்ந்தான் அன்றே
மேடையதை கலகலக்க வைத்த
ஸ்ரீதர்
மேன்மையுற பாட்டெழுதி வென்றான் இவனும்
ஆடையதாய் அணிகலனாய் வகவம் வந்தான்
ஆற்றலுடை தனபாலன்
எங்கள் தோழன்
கவியரங்கை தலையேற்க முன்னே வந்தான்
கவிமகனாம் தனபாலன்
கொண்டான் ஆர்வம்
புவிமயங்கும் வார்த்தைகளால்
கவிதை கோத்து
புகழ் பரப்பு வான் எங்கள்
கவிஞர் சேர்த்து
தவிக்கின்ற கவியுள்ள தாகம் தீர்க்க
தகைமையுள கவிதருவான்
நிற்பான் இவன் வான்
குவிக்கின்ற புகழ் தன்னை வகவம் கொள்ள
கவிமகனே தனபாலா
உன்னைக் காட்டு
கவிஞர் எஸ். தனபாலன்
உன்றன் தலைமேல்
வைத்துவிடு வகவத்தின்
புகழை மலைமேல் !
புகழை மலைமேல் !