எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 11 அக்டோபர், 2022

ஆர். பி. யசோதரை

 வலம்புரி கவிதா வட்டத்தின் 80 ஆவது கவியரங்கு 09/10/2022 ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடத்துமாறு கவிஞர் #ஆர்.#பி. #யசோதரைக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன். 


   - என். நஜ்முல் ஹுசைன்,

     தலைவர்,

     வலம்புரி கவிதா வட்டம்

    (வகவம்)


பல்வேறு ஆற்றலினை தன்னகத்தே

பவ்வியமாக வைத்திருக்கும் ஒரு கவிஞர்

கல்விக்கண் திறப்பதற்காய் பாடுபடும்

கண்ணியத்திற்குரிய தொரு ஆசிரியர்

சொல்லெடுத்து கவிதையிலே சமர்

செய்து

சிறந்தவர்கள் பல்லோரின் பாராட்டை

நல்விதமாய்  அள்ளியவர்; சக்தியிலே

சுவையுடனே நிலாச்சோறு ஊட்டியவர்


வலம்புரியின் கவியரங்கை நேசித்து

வாஞ்சையுடன் கவிதைகள் முழங்கியவர் 

சிலம்போசை சொற்களிலே தமிழ் குழைத்து

சிறப்புடனே சீர்பெற்று விளங்கியவர் 

பலனாக இன்றெங்கள் வகவத்தின்

தலைமையிலே பெருமையுடன் தானிருந்து 

கலகலப்பாய் கவியரங்கை நடத்திடவே 

கவிஞர்கள் அணிவகுக்க துணைநின்றார் 


மனமகிழ்ந்தே தலைமையினை தானேற்க

மாட்சியுடன் இங்கின்று வந்தவரை

கனவோடும் கவிதைகளை நெஞ்சினிலே 

களிப்புடனே சுகமெனவே சுமந்தவரை

இனங்கண்டே நாமின்று வரவேற்றோம்

இருகைகள் - இருக்கையும்

நாம் தந்தோம் 


தொடுகிறதா இவர் கால்கள் இத்தரை

தொட்டிடுவார் கவிஞர்களின் மனத்திரை

மிடுக்குடனே பதித்திடுவார் முத்திரை

மிளிர்ந்திடவே வருகின்றார் யசோதரை 


கவிதாயினி

ஆர். பி. யசோதரை

காட்டுங்கள் உங்களது பொறிமுறை

கைவந்ததுதானே உங்களுக்கு இத்துறை

கவியரங்கு உங்களிடம்; விலகியது திரை 


தொடங்குங்கள் தொடருங்கள் 

கவியரங்கை

கவியரங்கத் தலைவரே

ஆர். பி. யசோதரை