எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 31 மார்ச், 2015





free website counter

புதன், 25 மார்ச், 2015

இஸ்லாமிய கீதம் - இயற்றியவர் : என். நஜ்முல் ஹுசைன். பாடியவர்: ஈழத்து இசை முரசு கலைக்கமல்
https://www.filepicker.io/api/file/mVqhhhRKa1edcCdFAxRw

வியாழன், 12 மார்ச், 2015

Map IP Address
Powered byIP2Location.com

சனி, 7 மார்ச், 2015



இலங்கையில் கைபேசி மொபைல்கள் வந்த ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட கவிதை. (15-2-1994) அப்போதுள்ள மொபைல்போன்களுக்கு நீட்டிக் கொண்டு ஏரியல்கள் இருந்தன. அத்தோடு வரும் அழைப்புகளுக்கும் கட்டணம் அறவிடப்பட்டன.

தொலைபேசி குழந்தை

 

-    என் நஜ்முல் ஹுசைன்

தொலைபேசி அன்னைக்கு
இங்கும் ஒரு
பிரசவம் நடந்துள்ளது

அமைதியாய்
ஆயிரம் முட்டைகள்

முத்தமிட்டால் மட்டுமே
காசு கேட்டாள்
அன்னை

காதை வைத்தாலும்
காசு கேட்கும்                         
குழந்தை

ஓற்றைக்கொம்பு
குழந்தை
தொப்புள்கொடி
அறுத்துக் கொண்டு

அதனால்
செல்லும் இடங்களுக்கெல்லாம்
தூக்கிச் சென்று
கொஞ்சி மகிழும்
நாங்கள் -
இப்போது எங்களுக்கும்
கொம்பு முளைத்திருக்கிறது

வெள்ளி, 6 மார்ச், 2015

ஞானம் பெப்ரவரி 2015 இதழில் வெளியாகியிருக்கும் எனது சிறுகதை




  அருமையான என்விலப்
                                                                           


                                                                                   என். நஜ்முல் ஹுசைன்


காலையிலேயே எனது மொபைல் போன் பாட்டுப் பாடியது. அன்று திங்கட்கிழமை. பரபரப்பாக அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தேன்.
அந்த பரபரப்பிலும் யார் மொபைல் போனில் என்று பார்த்தேன். நேற்று தனது நூல் வெளியீட்டு விழாவை நடாத்திய எனது நண்பன்.

'என்ன மச்சான் செய்தி.............இந்த காலையிலேயே.......?' என்று கேட்டேன்.

'மச்சான், நேத்து நீ வச்ச என்விலப்பில ஒரு சதமும் இல்ல மச்சான். வெறும் என்விலப்தான் இருந்திச்சு..' மிகவும் கவலையோடு சொன்னான்.

'அடட அப்படியா......... நான் பார்க்கிறன் மச்சான்....' அதை விட கவலையான குரலில் நான் கூறிவிட்டு லைனை கட் பண்ணினேன்.
 
.........*............*.................*................*...........*.............*...........


அவன் எனது பாடசாலையில் என்னோடு படித்த பல நண்பர்களில் ஒருவன். படிக்கும்போதே பத்திரிகைகளுக்கெல்லாம் எழுதி அனுப்புவான். பிரசுரமாகும் ஆக்கங்களை காட்டி மகிழ்வான். என்னிடமெல்லாம் அவனைப்போல் எழுதும் ஆற்றல் இல்லை. வாசிப்பதோடு சரி.

பாடசாலை வாழ்க்கை முடிந்ததும் நாங்கள் வெவ்வேறு தொழில்துறைகளிலே ஈடுபட்டோம். எனது நண்பனின் எழுத்து முயற்சிகள் தொடர்ந்தன. அவை இப்போது நூல் உருவாகின.

அடிக்கடி அவனது நூற்கள் வெளிவரத் தொடங்கின. கவிதை, சிறுகதை, கட்டுரை என்று எல்லா துறைகளையும் தொட்டு எழுதினான்.

ஓவ்வொரு வெளியீட்டு விழாவுக்கும் என்னை அழைக்கத் தவறவில்லை. நூல் அச்சில் இருக்கும் போதே பேசுவான்.

'மச்சான்... என்ட கவிதை தொகுதி தயாராகிக் கொண்டிருக்குது. வெளியீட்டு விழாவுக்கு சொல்லுவன். கட்டாயம் வரணும். ஒரு சிறப்பு பிரதியும் வாங்கணும்.' என்பான்.

மறுபடியும் சிலநாட்களுக்குப் பிறகு பேசுவான், 'மச்சான் வெளியீட்டு விழா ரெடி. ஓன்ட பேரையும் வாங்குற லிஸ்ட்ல போடுறன். கட்டாயம் வா மச்சான். வந்து ஒரு பிரதி வாங்கு' உரிமையோடு மிகவும் அன்பாக பேசுவான்;; உருகி உருகி பேசுவான்.

அழைப்பிதழை அனுப்பிய பின்பும் ஞாபகமூட்ட பேசுவான். 

அவனது ஒரு வெளியீட்டு விழாவையும் நான் தவறவிட்டதே இல்லை. எனது பெயர் அறிவிப்பாளரால் அறிவிக்கப்படும் போது மிகவும் பெருமிதத்தோடு மேடையில் சென்று ஒரு பிரதியை வாங்கி வருவேன். அப்படி வாங்கும் ஒவ்வொரு முறையும் எனது கவரில் இரண்டாயிரத்துக்கு குறையாமல் பணம் வைப்பேன். கவரின் மேல் எனது பெயரை மிகவும் அழகாக எழுதுவேன். 

இதுவரை அவன் பத்து நூற்களுக்கு மேல் வெளியிட்டு விட்டான். ஒவ்வொரு வெளியீட்டு விழாவுக்கு பின்னும் அவனது தொலைபேசி அழைப்பை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன்.

'மச்சான் உன்ட பணம் ரெண்டாயிரம் கெடைச்சிச்சு. ரொம்ப தேங்ஸ்' என்று சொல்வான் என்று காத்திருப்பேன். இன்று பேசுவான், நாளை பேசுவான் என்று நான் இலவு காத்த கிளியாய் ஏமாந்ததுதான் மிச்சம். ஒருநாள் கூட வெளியீட்டு விழாவுக்குப் பின் என்னோடு பேசியதேயில்லை. அடுத்த வெளியீட்டு விழாவுக்காக அழைக்கும்போது கூட இது குறித்து ஒப்புக்காகக்கூட ஒரு வார்த்தை பேசியதேயில்லை.

அப்படி அவன் பேசினால் நான் எவ்வளவு மகிழ்ச்சி கொள்வேன்.அத்துடன்; அவனது வெளியீட்டு முயற்சிக்கு எனது சிறு தொகையும் உதவியிருக்கிறதே என்ற திருப்தியைத் தவிர எனக்கு வேறு என்ன கிடைக்கப் போகிறது ?

எனக்கு ஒரு பெரிய சந்தேகம் இருந்து வந்தது. நான் கொடுக்கின்ற என்விலப் அவனிடம் போய் சேர்கிறதோ, இல்லையோ ? 

இதை பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என என் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. ஏனென்றால் நான் ஒன்றும் பணத்தை மரத்திலிருந்து பறிப்பவன் அல்ல.

நேற்று நடந்த அவனது வெளியீட்டு விழாவுக்கும் வழமை போல் போனேன். போகும்போதே ஒரு கவரை எடுத்து எனது பெயரை அழகாக எழுதினேன். அதனை கம் போட்டு ஒட்டினேன்.

மேடையில் எனது பெயர் அறிவிக்கப்பட்டதும் கவரை கொடுத்து எனது பிரதியை வாங்கிக் கொண்டேன்.

கவரை கம் போட்டு ஒட்டினேன் என்று சொன்னேன் அல்லவா. ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். அதற்குள் நான் வேண்டுமென்றே பணத்தை வைக்கவே இல்லை.

 .........*........*.......*..........*................*.........................*............*.