இலங்கையில்
கைபேசி மொபைல்கள் வந்த
ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட
கவிதை. (15-2-1994) அப்போதுள்ள மொபைல்போன்களுக்கு
நீட்டிக் கொண்டு ஏரியல்கள்
இருந்தன. அத்தோடு வரும்
அழைப்புகளுக்கும்
கட்டணம் அறவிடப்பட்டன.
தொலைபேசி குழந்தை
- என் நஜ்முல் ஹுசைன்
தொலைபேசி அன்னைக்கு
இங்கும் ஒரு
பிரசவம் நடந்துள்ளது
அமைதியாய்
ஆயிரம் முட்டைகள்
முத்தமிட்டால் மட்டுமே
காசு கேட்டாள்
அன்னை
காதை வைத்தாலும்
காசு கேட்கும்
குழந்தை
ஓற்றைக்கொம்பு
குழந்தை
தொப்புள்கொடி
அறுத்துக் கொண்டு
அதனால்
செல்லும் இடங்களுக்கெல்லாம்
தூக்கிச் சென்று
கொஞ்சி மகிழும்
நாங்கள் -
இப்போது எங்களுக்கும்
கொம்பு முளைத்திருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக