வலம்புரி கவிதா வட்டத்தின் 55 வது கவியரங்கம் 22/12/2018 சனிக்கிழமை கொழும்பு ஐந்து லாம்பு சந்தி பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடாத்த கவிஞர் கலா விஸ்வநாதன் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் - என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்.
எல்லோரும் ஒன்றாக வே வாழ வேண்டு மென்றே
எந்நாளும் நினைக்கின்ற
ஏற்றமுடை மனதுடையான்
வல்லோனாய் தனைக் காட்டி
வார்த்தைகளில் விஷம் வைத்து
வஞ்சக மாய் தான் பேசி
யாரினதும் மனதுடையான்
மலையகத்து மக்கள் படும்
அப் பாட்டை தன் பாட்டாய்
கலையகத் தோடிவனும்
கவிதையிலே தான் வைத்தான்
விலைபோகும் அம் மக்கள்
விடுதலை யை தான் வேண்டி
சளைக்காதே அறைகூவி
சந்தர்ப்ப வாதிகளை
சொற்களினால் இவன் வைதான்
வலம்புரிக்காய் குரல் கொடுத்து
எம்மோடே இவன் இணைந்தான்
வலமாக இவன் நின்று
அன்று முதல் துணை வந்தான்
உளமார சொல்வதென்றால்
இவன் வியர்வை துளிகளுமே
களமாக இருந்தது வே
எம் வளர்ச்சிப் படிகளிலே
நெஞ்சகலா கவிஞனி வன்
எங்கள் கலா
விஸ்வ நாதன்
வஞ்சமிலா சொல்லெடுத்து
வந்து விட்டான்
தலைமை யேற்க
கவிஞனே கலா விஸ்வநாதனே
கவியரங்கை நீ நடத்து
எமை தந்திடவே உன்னிடத்து
நல்ல தமிழ் சொல்லெடுத்து
எம்மையெல்லாம் நீ கடத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக