வலம்புரி கவிதா வட்டத்தின் 35 ஆவது கவியரங்கு
12 – 03 – 2017 அன்று கொழும்பு, அல்ஹிக்மா கல்லூரியில் சக்தீ பால ஐயா அரங்கில் நடைபெற்றபோது கவியரங்கத் தலைமையினை ஏற்று நடாத்த கவிதாயினி ரி.என்.இஸ்ராஅவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்புவிடுத்தேன்
- என். நஜ்முல் ஹு சைன்,
தலைவர், வலம்புரி கவிதா வட்டம் - வகவம்
கூரான சிந்தனைகள் நெஞ்சில் கொண்டே
நேராக தன் கருத்தை முன்னே வைப்பாள்
சீராக இதயங்கள் ஆகவென்றே
வேராக வேமாறி சேவை செய்வாள்
கவிதையினை தன் கைக்குள்
போட்டுக் கொள்வாள்
புவிவெல்லும் கலைகூட
கற்றுக் கொள்வாள்
தவிக்கின்ற பெண்களுக்கும்
கரங்கள் நீட்டி
தானும் ஒரு பெண் என்றே
பெருமை கொள்வாள்
இன்றிந்த வகவத்தின்
கவிதை அரங்கை
தலையேற்று நடத்திடவே
துணிந்து வந்தாள்.
கவிதைமகள் இவள் பெயரோ
ரி.என். இஸ்ரா
வகவத்தையே நினைத்தாள்
தனது உசுரா
தெல்தோட்டை புலவர் மண்
சொந்தம்; பிசிறா
சொல்லெடுத்து வீசிடுவாள்
பந்தோ தூஸ்ரா
கவிதாயினி
ரி.என். இஸ்ரா
கவியரங்கத் தலைமையினை
உன்றன்
தலைமேல் வைத்தோம்
எங்கள் செவிகளையே
உன்னிடத்தில்
கடனே கொடுத்தோம்
கவியரங்க சாகரத்துள்
எம்மை ஆழ்த்து
வந்து குவிந்துவிடும்
உன்றனுக்கு
கவிஞர் வாழ்த்து !
1 கருத்து:
என் கவிதை பயணத்தில் வகவத்திற்கு அளப்பரிய பங்கு உண்டு. வகவ மேடையே பள்ளி பருவத்திற்கு பின்னர் தாராளமாக ஒலிவாங்கியை தந்தது. பின்புலத்தை அறியாது பாராட்டியது. அதில் உங்களின் ஈடுபாடும் அங்கீகாரமும் நன்றியோடு நினைவுகூர்ந்தார் இது.
கருத்துரையிடுக