வலம்புரி கவிதா வட்டத்தின் 78 ஆவது கவியரங்கு 17/03/2022 வியாழக்கிழமை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடாத்துமாறு நான் கவிஞர் கம்பளை ரா. சேகர் அவர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்தேன் -
என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வகவம்
வகவத்தில் கவிதை பாட
வேண்டுமே என்ற ஆவல்
வாஞ்சையாய் இவரை வருட
அகத்திலே ஆர்வம் துள்ள
கரத்திலே கவிதை ஏந்தி
அதனுடன் கெமெரா ஏந்தி
முகத்திலே மகிழ்ச்சி பொங்க
மலையகம் முன்னே நிற்க
தகதக என்று இவரும்
பல மைல் தாண்டி வருவார்
சோர்வினை கண்டதில்லை
பத்திரிகை நிருபர் நல்ல புகைப்படக்காரர் இவரும்
பவ்வியமாக வந்து எம்முடன் சேர்ந்ததாலே
முத்திரைப் பதிக்கும் படங்கள்
முழுவதும் தந்து எங்கள்
கவிஞர்கள் இதய வீட்டில்
தனியிடம் பிடித்துக் கொண்டார்
நித்திரைப் போக்க வேண்டும் மலையகம் என்று பாடி
உணர்வினை நெஞ்சிலூட்டி
உயர் இடம் பெற்றுக் கொண்டார்
வலம்புரி கவிதா வட்ட கவிதையின் அரங்கு தன்னை
தலைமையே ஏற்று செய்க
என்று நாம் வேண்டி நின்றோம்
உளம்நிறை பூரிப்போடு சரியென
வந்து நின்றார்
கம்பளை சேகர் இன்று
சரிந்திடா சரித்திரத்தை படைத்திடும்
வகவ மேடை
சிறப்புற வேண்டும் என்றே
தன்பணி செய்ய வந்தார்
கவிஞர் கம்பளை ரா. சேகர்
கவிஞர் கம்பளை ரா. சேகர்
படம் பிடித்து கவிதை பாடும்
உங்களிடம்
எங்கள் கவியரங்கத் தலைமை
நாங்கள் படம் பிடித்து வைத்துக் கொள்ள
எங்கள் கவிஞர்களுடன் காட்டுங்களேன்
உங்கள் திறமை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக