எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 17 அக்டோபர், 2016

கவிதாயினி சுபாஷினி பிரணவன்


வலம்புரியின் இடம் புரிந்து வந்தார் - தன்
வளமான கவிதைக்கு
களம் கண்டு கொண்டார்
சிலம்பேந்தி வந்தவரைப் போலே - தன்
சினமேந்தி கயவர்களை
சுட்டெரித்துக் கொன்றார் !

புதியவராய் வந்தாலும் கூட
புனல் கண்ட பயிர் போலே
புத்தூக்கம் கொண்டார்
பதிந்திடவே எங்களது மனதில்
பலகவிதை யேதந்து
பாராட்டும் பெற்றார் !

ஆசிரியராய் இவரின் பணிகள்
அயராது இவர் கவனம் மாணவர்கள் மீதே
நேசித்தே மாணவர்கள் உயர
நேர்த்தியுட னேஉழைப்பார் 
ஓய்வென்பதில்லை !


கோலெடுத்து நாம் கதைத்தாலோ
நாளை
கோலெடுத்து நாடாளும் மாணவரோடே
நான்இங்கே பிஸி என்பா ரே
பூரித்துப்  போவோமே நாமும்

இன்று
முப்பத்தோராவது அரங்கு
கொடுத்தோமே டீச்சருக்கு
தலைமையினை உவந்து !

சபாஷ் இனி பெறவேண்டும் என்று
சுபாஷினி தேர்ந்தோமே
தலைமையுமே தாங்க

கவிதாயினி
சுபாஷினிபிரண வன்
ஆக்கிடுவாரா
எங்கள் கவியரங்கை
நம்பர் வன்

சுபாஷினி பிரணவன்
இனி
கவி யரங்கு உங்க ளுக்கு

ஒளிரட்டும் தமிழ் விளக்கு !

1 கருத்து:

Kalaimahan சொன்னது…

தலைமை யேற்றதே சீராய்த் தன்பங்கை
தமிழினி லாற்றலை வெகுவாய்க் காட்டினார்
இலைமறைகாயா யிவர் இத்தனை காலம்
இருந்த தெங்கே என்னெஞ்சம் வினவுதே வினா!

வகவம் வண்ணத் தமிழினிற்கு அணியே
வாழ்த்திடுவேன் வகவப் பணி நானிலத்து
தகைமை மிக்க பணியென்றே யானுந்தான்
தனயன் பயணம் தொடரூந்தா யாக்கிடுவான்!

-தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ் (வெலிகம)