எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 27 ஜூன், 2016

திங்கள், 30 மே, 2016

கொசு(று)க் கவிதைகள்


*அழையா_விருந்தாளிகள்‬

 இப்போது நாங்கள்
தனியாக உண்பதேயில்லை-
கொசுக்கள்



*‎இன_ஒற்றுமை‬

 வெள்ளமே உன்னால்
இப்போது
இன வேற்றுமை இல்லை -
ஒரே சவனில்தான்
சாப்பிடுகின்றோம்
நாங்களும்
கொசுக்களும் !


- என். நஜ்முல் ஹுசைன்

புதன், 25 மே, 2016

பக்தி‬



இங்கே பலர்
புத்தனை
தலைகீழாய்
பின்பற்றுகின்றனர்


அவன்
அரசனாயிருந்து
ஆண்டியானவன்


இவர்கள்
ஆண்டியாயிருந்து
அரசனாகிறார்கள்


-          என். நஜ்முல் ஹுசைன்

திங்கள், 23 மே, 2016

போட்டாப்போட்டி‬



நீ பெரிய
தீவிரவாதியா ?
நான் பெரிய
தீவிரவாதியா ?
சண்டைப் பிடித்துக் கொண்டன
வெயிலும், மழையும்

கழுத்தறுப்பட்டுக் கிடக்கிறான்
மனிதன்!


- நஜ்முல் ஹுசைன்

திங்கள், 4 ஏப்ரல், 2016

கவிஞர் கே.லோகநாதன்


புதன், 9 மார்ச், 2016

என் அன்னைக்கான பாடல்








செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கவிஞர் வெலிப்பன்ன அத்தாஸ்





வலம்புரி கவிதா வட்டத்தின் 25 வது கவியரங்கு கொழும்பு அல்  ஹிக்மா கல்லூரியில் 22/02/2016 அன்று நடைபெற்றபோது கவியரங்க தலைமையை ஏற்று நடத்துமாறு கவிஞர் வெலிப்பன்ன அத்தாஸ் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்புவிடுத்தேன்  - என். நஜ்முல் ஹுசைன்

தென்னிலங்கை தென்றல் இந்த கவிஞர் - எங்கள்
தேசத்தின் மூத்த எழுத் தாளர்
தன்னுணர்வை தமிழுக்குக் கொடுத்து - எமை
தலை நிமிர்ந்து பார்த்திடவே வைத்தார்

கற்பிக்கும் தொழிலை மேற்கொண்டார் - அதை
தொழிலல்ல சேவை என்று நின்றார்
வற்றாத ஆற்றலத னாலே
வளம்மிக்க அதிபர் என மிளிர்ந்தார்

சிறுவருக்கும் இலக்கியங்கள்
படைத்தார் - பல
சிறுகதைகள் நமக்களித்து
களித்தார்
சுறுசுறுப்பாய் இயங்கும் இக் கவிஞர்
முறுவலித்தே வகவத்தில்
இணைந்தார்

மூத்த கவி இக் கவியை நாங்கள்
முழு
மனதோடு தான் வர வேற்றோம்
யாத்து கவி கொண்டு வரும் கவிஞர்
கவிதை
கோத்தெடுத்து நறுமணமே வீசும்
பாதிறமே காட்டுங்கள் என்று ……
அதில் உங்கள்
பாத்திரமே காட்டுங்கள் என்று ……..

கொடுத்திடுவோம் இன்று
கவியரங்க தலைமை யினை
கவிஞர் அத்தாஸுக்கு

வழிவிடுவோம்
வெடிக்கப்போகும் எங்கள்
கவிஞர்களின்
கவிதை பட்டாசுக்கு..