திங்கள், 4 ஏப்ரல், 2016
புதன், 9 மார்ச், 2016
செவ்வாய், 23 பிப்ரவரி, 2016
கவிஞர் வெலிப்பன்ன அத்தாஸ்
வலம்புரி
கவிதா வட்டத்தின் 25 வது கவியரங்கு கொழும்பு
அல் ஹிக்மா
கல்லூரியில் 22/02/2016 அன்று நடைபெற்றபோது கவியரங்க
தலைமையை ஏற்று நடத்துமாறு கவிஞர்
வெலிப்பன்ன அத்தாஸ் அவர்களுக்கு நான்
இவ்வாறு அழைப்புவிடுத்தேன் - என்.
நஜ்முல் ஹுசைன்
தென்னிலங்கை
தென்றல் இந்த கவிஞர் - எங்கள்
தேசத்தின் மூத்த எழுத் தாளர்
தன்னுணர்வை தமிழுக்குக் கொடுத்து - எமை
தலை நிமிர்ந்து பார்த்திடவே வைத்தார்
கற்பிக்கும் தொழிலை மேற்கொண்டார் - அதை
தொழிலல்ல சேவை என்று நின்றார்
வற்றாத ஆற்றலத னாலே
வளம்மிக்க அதிபர் என மிளிர்ந்தார்
சிறுவருக்கும் இலக்கியங்கள்
படைத்தார் - பல
சிறுகதைகள் நமக்களித்து
களித்தார்
சுறுசுறுப்பாய் இயங்கும் இக் கவிஞர்
முறுவலித்தே வகவத்தில்
இணைந்தார்
மூத்த கவி இக் கவியை நாங்கள்
முழு
மனதோடு
தான் வர வேற்றோம்
யாத்து கவி கொண்டு வரும் கவிஞர்
யாத்து கவி கொண்டு வரும் கவிஞர்
கவிதை
கோத்தெடுத்து நறுமணமே வீசும்
பாதிறமே காட்டுங்கள் என்று ……
அதில் உங்கள்
பாத்திரமே காட்டுங்கள் என்று ……..
கொடுத்திடுவோம் இன்று
கவியரங்க தலைமை யினை
கவிஞர் அத்தாஸுக்கு
கோத்தெடுத்து நறுமணமே வீசும்
பாதிறமே காட்டுங்கள் என்று ……
அதில் உங்கள்
பாத்திரமே காட்டுங்கள் என்று ……..
கொடுத்திடுவோம் இன்று
கவியரங்க தலைமை யினை
கவிஞர் அத்தாஸுக்கு
வழிவிடுவோம்
வெடிக்கப்போகும் எங்கள்
வெடிக்கப்போகும் எங்கள்
கவிஞர்களின்
கவிதை பட்டாசுக்கு..
கவிதை பட்டாசுக்கு..
வெள்ளி, 29 ஜனவரி, 2016
கவிஞர் முல்லை வீரக்குட்டி
வகவத்தின் 24வது கவியரங்கு
23/01.2016 அன்று இடம்பெற்றபோது கவியரங்கை கவிஞர் கலாபூஷணம் முல்லை வீரக்குட்டி தலைமையேற்று
நடத்தினர். கவிஞர் முல்லை வீரக்குட்டி இதற்கு முன்பு வலம்புரி கவிதா வட்டத்தின் கவியரங்கில்
கலந்து க்நோடவர் அல்ல. கவியரங்கை தலைமையேற்று நடத்துமாறு நன் அவருக்கு இவ்வாறு அழைப்புவிடுத்தேன்.
- என். நஜ்முல்
ஹுசைன்
தமிழ் கவிதை உலகினிலே
தனக்கென்றோர் இடம்பிடித்து
தலை நிமிர்ந்து நிற்கும் ஓர்
தகை சார்ந்த கவிஞர் இவர்
பத்திரிகை வானொலியில்
பக்குவமாய் இடம் பிடித்து
வித்துவத்தைக் காட்டியவர்
வீணர்களைச் சாடியவர்
சமுதாய அவலத்தை
சரித்திரத்தில் அழிப்பதற்கு
தமதெழுத்தை ஆயுதமாய்
தான்ஆக்கிக் காட்டியவர்
முற்போக்கு எழுத்தாளர்
சர்வதேச அரங்கினிலே
முனைப்போடு தானேறி
முழங்கியவர் தன்கவிதை
பரிசில்கள் பாராட்டு
என்றேதான் குவித்தாலும்
விரிசல்கள் இல்லாத
நட்போடு பழகுபவர்
அம்புவில் என வளைந்து
சொல்லெடுத்து விளையாடும்
தம்பிலுவில் தந்த
தமிழ் நெஞ்ச கவிஞர் இவர்
தூரத்தில் இருந்தேதான்
பார்த்திருந்தார் வகவத்தை
பாரத்தை இவர் தலையில்
வைப்போமே என்றெண்ணி
ஆரத்தழுவித்தான் அழைத்ததுவே இக் கவியை
கவிஞர்
முல்லை வீரக்குட்டி - எங்கள்
சொல்லை ஓரங்கட்டி
சென்றிடவே மாட்டார் என்ற
தைரியத்தில் தான் அழைத்தோம்
கவிஞர் முல்லை வீரக்குட்டி அவர்களே
எங்கள் வகவக் கவியரங்கை
உங்கள் தலை மேலே
தூக்கி வைத்தோம் -
வகவ
கவிஞருடன் கைகோத்து
எங்கள் கவி தாகம்
போக்கி வைப்பீர் கள்
என்ற
நம்பிக்கையில்.............. !
தனக்கென்றோர் இடம்பிடித்து
தலை நிமிர்ந்து நிற்கும் ஓர்
தகை சார்ந்த கவிஞர் இவர்
பத்திரிகை வானொலியில்
பக்குவமாய் இடம் பிடித்து
வித்துவத்தைக் காட்டியவர்
வீணர்களைச் சாடியவர்
சமுதாய அவலத்தை
சரித்திரத்தில் அழிப்பதற்கு
தமதெழுத்தை ஆயுதமாய்
தான்ஆக்கிக் காட்டியவர்
முற்போக்கு எழுத்தாளர்
சர்வதேச அரங்கினிலே
முனைப்போடு தானேறி
முழங்கியவர் தன்கவிதை
பரிசில்கள் பாராட்டு
என்றேதான் குவித்தாலும்
விரிசல்கள் இல்லாத
நட்போடு பழகுபவர்
அம்புவில் என வளைந்து
சொல்லெடுத்து விளையாடும்
தம்பிலுவில் தந்த
தமிழ் நெஞ்ச கவிஞர் இவர்
தூரத்தில் இருந்தேதான்
பார்த்திருந்தார் வகவத்தை
பாரத்தை இவர் தலையில்
வைப்போமே என்றெண்ணி
ஆரத்தழுவித்தான் அழைத்ததுவே இக் கவியை
கவிஞர்
முல்லை வீரக்குட்டி - எங்கள்
சொல்லை ஓரங்கட்டி
சென்றிடவே மாட்டார் என்ற
தைரியத்தில் தான் அழைத்தோம்
கவிஞர் முல்லை வீரக்குட்டி அவர்களே
எங்கள் வகவக் கவியரங்கை
உங்கள் தலை மேலே
தூக்கி வைத்தோம் -
வகவ
கவிஞருடன் கைகோத்து
எங்கள் கவி தாகம்
போக்கி வைப்பீர் கள்
என்ற
நம்பிக்கையில்.............. !
செவ்வாய், 12 ஜனவரி, 2016
கிண்ணியா அமீர் அலி
வலம்புரி கவிதா வட்டத்தின் 17 வது கவியரங்குக்கு தலைமை தாங்க சந்தக் கவிமணி கிண்ணியா அமீர் அலியை நான் இவ்வாறு அழைத்தேன். அன்றைய கவியரங்கு ஒலி வாங்கி இல்லாமலேயே நடைபெற்றது
- என். நஜ்முல் ஹுசைன்
சுந்தரத்துத் தமிழெடுத்து
சந்தனத்திலே கலந்து
சந்தத்திலே அதைக் குழைக்கும்
சொல்லான்
கவிதையன்றி வேறெதையும்
சொல்லான்
கண்மூடி கண்திறக்கும்
வேளையெல்லாம் கவிதையிலே
தனைமறந்து வான்பறந்து நிற்பான்
அதை
“ கோல்” எடுத்து
எங்களிடம் பகிர்வான்
எங்களிடமுள்ளது அலுமாரி
இவனிடமோ எலிமாரி
அலுமாரியில் வளர்த்தான் எலி
தோளிலே வளர்த்தான் கிளி
நெஞ்சிலே வளர்த்தான்
சந்தனத்திலே கலந்து
சந்தத்திலே அதைக் குழைக்கும்
சொல்லான்
கவிதையன்றி வேறெதையும்
சொல்லான்
கண்மூடி கண்திறக்கும்
வேளையெல்லாம் கவிதையிலே
தனைமறந்து வான்பறந்து நிற்பான்
அதை
“ கோல்” எடுத்து
எங்களிடம் பகிர்வான்
எங்களிடமுள்ளது அலுமாரி
இவனிடமோ எலிமாரி
அலுமாரியில் வளர்த்தான் எலி
தோளிலே வளர்த்தான் கிளி
நெஞ்சிலே வளர்த்தான்
கொஞ்சம் கிலி
என்றாலும்
என்றுமே தமிழ் வளர்க்கத்தான்
முன்னின்றான் அமீர் அலி
கிண்ணியா அமீர்அலி
சந்தனக் கவியே
சந்தக்கவியே அமீர் அலி
வகவம் இன்றுன்னை
தலைமைக்கே அழைத்தது
எனினும்
வாய் “மைக்”குத் தரவில்லை
பொய்மைக்கும், வாய்மைக்கும் இடையே
பின்னுகின்ற
கவிமைக்கைக் கொண்டவனே
உனக்கெதற்கு வாய் மைக்கு என்று
அம்மைக்கைத் தரவில்லை
நீ
இம்மைக்கும், மறுமைக்கும் என்று
கவியரங்கை நடத்து……………..
ஒலிவாங்கித் தரவில்லை என்றாலும்
எங்கள்
கை ஒலி
வாங்கிச் செல்……………..
என்றுமே தமிழ் வளர்க்கத்தான்
முன்னின்றான் அமீர் அலி
கிண்ணியா அமீர்அலி
சந்தனக் கவியே
சந்தக்கவியே அமீர் அலி
வகவம் இன்றுன்னை
தலைமைக்கே அழைத்தது
எனினும்
வாய் “மைக்”குத் தரவில்லை
பொய்மைக்கும், வாய்மைக்கும் இடையே
பின்னுகின்ற
கவிமைக்கைக் கொண்டவனே
உனக்கெதற்கு வாய் மைக்கு என்று
அம்மைக்கைத் தரவில்லை
நீ
இம்மைக்கும், மறுமைக்கும் என்று
கவியரங்கை நடத்து……………..
ஒலிவாங்கித் தரவில்லை என்றாலும்
எங்கள்
கை ஒலி
வாங்கிச் செல்……………..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




