புதன், 19 ஜூன், 2019
வெள்ளி, 5 ஏப்ரல், 2019
எந்த சீட் வேண்டும்? சிறுகதை "எங்கள் தேசம் "
2019 ஏப்ரல் மாத "எங்கள் தேசம் " சஞ்சிகையில் எனது சிறுகதை. நன்றி சகோதரர் இர்ஸாத் இமாம்தீன்
எந்த சீட் வேண்டும்?
~~~~~~~~~~~~~
- என். நஜ்முல் ஹுசைன்
கட்சிக் கொடிகள் எங்கும் பறந்தன. தேர்தல் பிரசாரங்கள் களை கட்டியிருந்தன. இம்முறை ஆட்சி எங்களின் அனுசரணையில்தான் என்ற வீர முழக்கம் எங்கும் ஒலித்தன.
அந்த முஸ்லிம் பிரதேசம் அல்லோலகல்லோலப்பட்டது. முஸ்லிம் முன்னேற்றக் கட்சியின் முதன்மை வேட்பாளராக இருந்து தொடர்ந்து 20 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் சமத் ஹாஜியாரை அசைக்க, முஸ்லிம் குறையகற்றுவோர் கட்சிக்கு சரியான போட்டியாளர் அகப்பட்டார் என்பதில் அக் கட்சிக்காரர்களுக்கெல்லாம் அளவிடமுடியாத ஆனந்தம்.
அப்பிரதேசத்தில் சமத் ஹாஜியார் அசைக்க முடியாத செல்வாக்கு பெற்றிருந்தார். எத்தனை கரணமடித்தும் அவரை தோற்கடிக்கவே முடியவில்லை.
இம்முறை தேர்தலிலும் அப்படித்தானோ என எண்ணிக் கொண்டிருந்த போதுதான் அவர்களுக்கு புரவலர் சித்தீக் ஹாஜியார் கண்களில் பட்டார்.
பெரும் கோடீஸ்வரர். வாரி வழங்கும் வள்ளல். உதவி என்று யாரும் கேட்டு வெறுங்கையுடன் திரும்பிய சரித்திரமேயில்லை. மார்க்கப்பற்றுள்ளவர். எதையுமே இறையச்சத்துடன் செய்பவர்.
அரசியலில் ஒரு துளி கூட அவருக்கு ஈடுபாடு கிடையாது. இருந்தாலும் முஸ்லிம் குறையகற்றும் கட்சியினர் அவரைச் சுற்றி வளைத்தனர். "நீங்கள் சமுதாயத்திற்கு செய்யும் சேவை வீணாகப் போகக் கூடாது. சாதாரண ஒருவராக இருந்து செய்யும் சேவையை விட பாராளுமன்ற உறுப்பினராக இருந்து நிறைய செய்யலாம். நாளை அல்லாஹுத் தஆலாவும் உங்களிடம் கேள்வி கேட்பான். வாய்ப்பிருந்தும் ஏன் பயன்படுத்தவில்லை என்று " இப்படி பலதும் பத்தும் சொல்லி அரசியல் என்பதை வேம்பாக நினைத்துக் கொண்டிருந்த அவரது மனதில் மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள்.
" ஹாஜியார் , நீங்க ஒன்றுமே செய்ய தேவையில்லை. இந்த போர்ம்ல கையொப்பமிட்டா போதும் "
இப்படி பலபேர் அடித்த அடியில் அந்த அம்மி நகர்ந்தது.
புரவலர் சித்தீக் ஹாஜியார் தேர்தலுக்கு வந்து விட்டார் என்பதுவே அவர் எம்.பி. ஆகிவிட்டார் என்பது போலிருந்தது. அந்தப் பிரதேசத்தில் ஒவ்வொருவரும் சித்தீக் ஹாஜியாருக்கு ஏதோ ஒரு விதத்தில் கடமைப்பட்டிருந்தனர்.
அதனால் அப்பிரதேச மக்களின் வாக்குகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதில் இம்முறை முஸ்லிம் குறையகற்றும் கட்சிக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை.
அதனால் அதன் தொண்டர்கள் வழமையைவிட உற்சாகமாக களமிறங்கியிருந்தனர்.
அன்று மாலை முஸ்லிம் குறையகற்றும் கட்சி தனது முதலாவது பிரசாரக் கூட்டத்துக்கு ஊரின் பொது மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
புரவலர் சித்தீக் ஹாஜியார் எவ்வளவு மறுத்தும் தொண்டர்கள் அவரை ஊர்வலமாக அழைத்து வருவதில் பின் நிற்கவில்லை. ஒவ்வொரு விதமான கோஷமிட்டு அவரை உற்சாகமாக தெருவெங்கும் அழைத்துச் சென்றனர்.
இறுதியில் அவரை மேடை அமைந்திருந்த இடத்திற்கு அழைத்து வந்தனர். பெரும் ஜனத்திரள் அலை மோதியது. உண்மையில் சித்தீக் ஹாஜியார் அது போன்ற ஒரு கூட்டத்தை இப்படி ஒன்றாக கண்டதேயில்லை. கூட்டத்தைக் பார்த்து சித்தீக் ஹாஜியாருக்கு மலைப்பாக இருந்தது.
எத்தனையோ மாலைகள் ஹாஜியாரின் கழுத்தில் விழுந்தன. போட்டிப் போட்டுக்கொண்டு வந்து பலர் அவருக்கு பொன்னாடைப் போர்த்தினர். ஹாஜியாருக்கு மிகவும் சங்கோஜமாக இருந்தது. இருந்தாலும் அவர் சமாளித்துக் கொண்டார்.
கூட்டம் ஆரம்பமானது. பலர் மேடையில் வந்து பேசினர். சித்தீக் ஹாஜியாரை வானளாவ புகழ்ந்துத் தள்ளினர். அவர் இதுவரை காலமும் ஊருக்கு செய்த சேவைகளைப் பட்டியலிட்டுக் காட்டினர்.
எப்போதும் எதையும் விளம்பரத்திற்காக செய்யாதவர் புரவலர் சித்தீக் ஹாஜியார். ஆனாலும் இந்த அரசியல் மேடை
அவரை விளம்பரப்படுத்தி கூடியிருந்தவர்களின் மனங்களை களவாடிக் கொண்டிருந்தது. ஹாஜியாரின் கொடை கட்சியின் வாக்கு வங்கியை நிரப்ப நல்ல முதலீடாய் அமைந்தது.
ஒவ்வொருவராக பேசி முடித்ததும்
அறிவிப்பாளர் " இதோ இதுவரை நீங்கள் மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்த சொற்கொண்டல் சஹீத் பேசுவார் " என்று அறிவித்ததுமே சபை பெரும் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தது . மற்ற பேச்சாளர்களுக்கு இல்லாத வரவேற்பு சபையிலிருந்து அவருக்குக் கிடைத்தது. அதுமட்டுமல்ல அவர் பேசுவதற்கு முன்பே கொல்லென்று சிரித்தது.
சித்தீக் ஹாஜியார் பக்கத்திலிருந்தவரிடம் "இவர் யார் ?" என்று கேட்டார்?
"இவரா இவர்தான் எங்க கட்சிட நகைச்சுவைப் பேச்சாளர். நல்ல கேலியா பேசுவார். இவர்ட பேச்ச கேட்க எப்பவுமே நல்ல கூட்டம் கூடும் "
"அடட அப்படியா " என்று சித்தீக் ஹாஜியார் சொன்னார்.
சொற்கொண்டல் சஹீத் பேசினார். இல்லை இல்லை கத்தினார். வித்தியாசமான ஏற்ற இறக்கத்தோடு பேசினார். பல விதமான குரல்கள் அவரிடமிருந்து வெளிப்பட்டன. மிகவும் தாராளமாக வசைபாடினார்.
மிகவும் நையாண்டியாக எதிரணியினரை சாடினார். அந்தப் பிரதேச எம்.பி.யாக இருக்கும் சமத் ஹாஜியாரைப் பற்றி மிகவும் கேலியாக மோசமாக உரையாற்றினார். அவரது பிரத்தியேக வாழ்க்கையைப் பற்றி கேலியும், கிண்டலுமாக பேசினார். அவரது பேச்சு நல்ல மனிதரான சித்தீக் ஹாஜியாரை ஏதோ செய்தது.
"அடடா இதுதான் அரசியலா...." என்ற எண்ணம் ஓட்டம் அவரது மனதில் ஓடியது. சொற்கொண்டல் சஹீதின் பேச்சை சபை அப்படி சப்புக் கொட்டி ரசித்தது.
மற்றவர்களின் அசிக்கங்களை கேட்டு ரசிப்பதற்கு மனிதர்கள் எவ்வளவு ஆவலாக இருக்கிறார்கள்.
பேச்சாளர் சஹீத் கொஞ்சம் பேச்சை
நிறுத்தினார்.
மேசையிலிருந்த கூல் டிரிங்க் போத்தலைத் திறந்து மளமளவென்று குடித்தார்.
தொண்டையைக் கனைத்துக் கொண்டார். மேடையிலுள்ளவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டார்.
"சகோதரர்களே, இனி நான் சொல்லப்போவதுதான் மிகவும் சுவாரசியமானது.
எமது எதிரணி எம். பி.ட மனைவி இருக்காங்களே. லேடீஸ் கிளப்புக்கு போறேன் என்று அவங்க போடுற கூத்து இருக்கே........"என்று ஆரம்பித்து பல அசிங்கங்களை நகைச்சுவையாகப் பேசினார். எம். பி.யின் பெண் மக்களைப் பற்றிக் கூட கேவலமாக பேச அந்தப் பேச்சாளர் மறக்கவில்லை . சபை ரசிக்க ரசிக்க அதிக அசிங்கங்கள் சிறகடித்துப் பறந்தன.
சித்தீக் ஹாஜியார் மறுபடி பக்கத்திலுள்ளவரிடம் கேட்டார் "இவர் சொல்றதெல்லாம் உண்மையா ? சமத் ஹாஜியார் குடும்பம் அவ்வளவு மோசமானவங்களா ?" என்று கேட்டார்.
"இல்ல இல்ல. அது அப்படியில்ல. இங்க அரசியல் மேடைல உண்மைய மட்டும் பேசுனா எடுபடாது. இப்படி கொஞ்சம் பொய்யயும் கலந்து இன்டரஸ்டிங்கா பேசனும் . அப்பதான் எங்க கட்சி கூட்டத்துக்கு ஜனங்க நெறய வருவாங்க..... அவங்கள பத்தி அசிங்கமா பேசினாதான் எங்கட செல்வாக்கு கூடும்....."
அவர் சொல்லிக் கொண்டே போனார். இப்போதுதான் சித்தீக் ஹாஜியாருக்கு அரசியல் புரிய ஆரம்பித்தது.
உடனே ஆசனத்திலிருந்து எழுந்தார். பேசிக் கொண்டிருந்த சொற்கொண்டல் சஹீத் அருகே சென்று அவரை தனது கைகளால்
கொஞ்சம் தள்ளினார்.
ஒலிவாங்கியில் சித்தீக் ஹாஜியார் பேசினார், " இந்த அரசியல செய்யவா என்ன கூட்டி வந்தீங்க.
பதவிக்கு வர எந்தப் பொய்யயும் சொல்ல எங்க மார்க்கம் அனுமதி தந்திருக்கா. எங்கட சகோதரர்கள்ட எறச்சியா தின்றா நாங்க வாழனும். எங்கட முஸ்லிம் சகோதரரிய கேவலப்படுத்தியா பார்ளிமண்ட் போகனும்.
நான் சொர்க்கத்துட சீட்டுக்கு ஆசப்படுறவன். இந்தப் பார்லிமெண்ட் சீட்டுக்காக ஏன்ட சொர்க்கத்து சீட்ட விட்டுக் கொடுக்க எந்த எடத்திலேயும் நான் தயாரா இல்ல.
இந்த வெளயாட்டுக்கு நான் வரலை . தயவுசெய்து என்ன அல்லாஹ்வுக்காக விட்டுடுங்க"
பெரும் ஆவேசமாக பேசிய சித்தீக் ஹாஜியார் அதே வேகத்தில் மேடையை விட்டு இறங்கி நடந்தார். கனல் பறக்கும் கண்களோடு வெளியேறிய சித்தீக் ஹாஜியாரை தடுத்து நிறுத்தும் தைரியம் சபையில் யாருக்குமே வரவில்லை.
============================

வியாழன், 4 ஏப்ரல், 2019
கவிஞர் கவிநேசன் நவாஸ்
20 – 03 – 2019 புதன்கிழமை கொழும்பு ஐந்து லாம்பு சந்தி பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற வலம்புரி கவிதா வட்டத்தின் 58 ஆவது கவியரங்கிற்கு தலைமை தாங்க
கவிஞர் கவிநேசன் நவாஸ் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்புவிடுத்தேன்.
எத்தனை காலம் இவனின்
இலக்கிய பங்களிப்பு
அத்தனை செய்தே இவனும்
அடக்கமாய் வீற்றிருப்பான்
சித்தமே கவரும் வண்ணம்
சிரித் திவன் ஆற்றும் செயல்கள்
சுத்தமே ஆனதம்மா
துளியிலும் வஞ்சம் இல்லை
ஆரம்ப நாட்கள் முதலே
ஆர்வமாய் வகவத்தோடு
ஆரமாய் ஜொலித்து நின்றே
ஆற்றிய பணிகள் பலவாம்
வீரமாய் நானே செய்தேன்
வெற்றியும் எனக்கே சொந்தம்
காரமாய் இந்த வார்த்தை
கூறிய தில்லை இவனும் (என்றும் )
எழுதியே குவித்தா னெனினும்
என்னவோ தெரியவில்லை
எழுதிய தெல்லாம் தொகுத்து
ஏற்றமாய் நூலாய் போட
பொழுதுமே அமையவில்லை
பொறுமையாய் உள்ள இவனை
எழுந்திட வைப்போம் நூல்கள்
அளித்திட கரங்கள் தருவோம்
அற்புத சொற்கள் கோத்து
ஆழமாய் கவிதை யாத்து
சிற்பமாய் இவனும் எங்கள்
சிந்தையி லிடம் பிடித்தான்
உற்றவ னாகி இன்று
உவகையாய் ஏற்றுக் கொண்டு
பற்றுடன் கவிதை யரங்கை
பற்றினான் தலைமை யேற்றான்
கவிதையின் அரங்கின் தலைமை
கவிநேசன் எங்கள் நவாஸ்
கவிஞரோ டொன்று சேர்ந்து
பெற்றிட வேண்டும் சபாஷ்
புவியெங்கும் எங்கள் வகவ
புகழினை ஓங்கச் செய்தால்
தவிப்பிலை சொல்லி வைப்போம்
தலைமையில் பெற்றாய் நீ பாஸ்!
கவிஞா
கவிநேசன் நவாஸ்
இனி தலைமையினை
நீயும் ஏற்று - எமை
தழுவச் செய்
தென்றல் காற்று!

வெள்ளி, 29 மார்ச், 2019
தீர்க்கமான முடிவு - சிறுகதை
29/03/2019 "விடிவெள்ளி" பத்திரிகையில் இடம்பெற்றுள்ள எனது சிறுகதை "தீர்க்கமான முடிவு ". நன்றி பிரதம ஆசிரியர் சகோதரர் எம். பி.எம். பைரூஸ்
தீர்க்கமான முடிவு !
- என். நஜ்முல் ஹுசைன்
அனீஸுக்கு இருப்பே கொள்ளவில்லை. கையைப் பிசைந்து கொண்டு இங்குமங்கும் திரிந்து கொண்டிருந்தான்.
பெரும் புதுமையாக இருந்தது- இப்படி அனீஸ் குட்டி போட்ட பூனை போல் தவித்துக் கொண்டிருப்பது.
இப்படி அவன் தவித்துக் கொண்டிருப்பது அவனுக்காக அல்ல- யாருக்காகவோ !
இதுபோன்று யாருக்காகவோ அனீஸ்; புழுவாய் துடிப்பது அவனது வாழ்க்கையிலேயே இதுதான் முதல் தடவை. இதற்கு முன் அவன் எப்போதுமே மற்றவரைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை. கவலை என்ன மற்றவரை அவன் மனிதராக மதித்ததே இல்லை. தங்கக் கட்டிலிலே பிறந்த அனீஸுக்கு மற்றவர் நலன் என்பது கொஞ்சமும் தெரியாது.
பெற்றோருக்கு செல்லப் பிள்ளை. கேட்டதெல்லாம் கிடைத்தது. அதனால் இயற்கையாகவே மற்றவரை லட்சியப்படுத்தும் தன்மை அவனுக்கு அறவே அற்று போனது.
அவன் என்ன நினைத்தானோ அதைதான் அவன் எப்போதுமே சரி என்று நினைத்தான் அனீஸ் எப்போதுமே மூன்று கால் முயல் பிடிப்பவன். அதனால் அவனைச் சூழவுள்ளோர் அடிக்கடி மூன்று கால் முயலைக் காண்பார்கள்.
அந்தச் செல்வ செழிப்பான வாழ்க்கை அவனுக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே சொகுசு வாகனங்களின் பரிச்சயத்தைக் கொடுத்திருந்தது. அவனது கால் எக்ஸ்ஸலரேட்டரை, பிரேக்கைத் தொடும் முன்பே வாகனங்கள் ஓட்டக் கற்றுக்கொண்டான்.
இப்போது 22 வயது இளைஞன் அனீஸ்.
பலமுறை அவனது வாகனத்தில் மோதி பலர் சிறு சிறு காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அவர்களை எல்லாம் பணத்தை வீசி சமாளித்துவிடுவான்.
அன்றும் அப்படித்தான். வாகனத்தில் இருந்த வானொலி இசையில் தன்னை மறந்தவாறு மிகவும் வேகமாக வாகனத்தை செலுத்திக் கொண்டு வந்தான்.
மிகவும் தூரத்தில் ஓர் இளைஞன் மஞ்சள் கோட்டில் பாதையைக் கடந்து கொண்டிருப்பதை அவதானித்தான். என்றாலும் கூட அவனது வாகனத்தின் வேகம் கொஞ்சமும் குறையவில்லை.
வேகமாய் வரும் வாகனத்தைக் கண்ட அந்த வாலிபன் ஓட்டத்துடன் மஞ்சள் கோட்டைக் கடக்க முயன்றான்.
அவன் தெருவின் மறுமுனைக்கு சென்று கொண்டிருக்கும்போது அனீஸ் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டினை இழந்தான்.
அது அவனது சொல் கேட்காமல் சென்றது. ஏறக்குறைய பாதையைக் கடந்திருந்த அந்த இளைஞனை முட்டி மோதியது. 'அம்மா' என்ற அலறலுடன் அந்த இளைஞன் இரத்த வெள்ளத்திலே மிதந்தான். தனது வெறியைத் தீர்த்துக் கொண்ட அனீஸின் வாகனம் சுய நினைவு பெற்று நின்றது.
இரத்த வெள்ளத்தில் அவன் கண் முன்னாலேயே ஒருவனைக் கண்டவுடன் அனீஸ் தன் சுயநினைவை இழந்தான்.
இவ்வளவு நேரமும் யாருமே இல்லாத தெருவாய் இருந்த அந்தப் பாதையில் ஈக்கள் பறந்து வருவதைப் போன்று பலர் விரைந்து வந்தார்கள். இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த வாலிபனையும், அனீஸையும் சூழ்ந்து கொண்டனர்.
அனீஸின் நல்ல காலம். பொலிஸ்காரர்கள் கூட அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அது சூழ இருந்தவர்களின் தர்ம அடியிலிருந்து அவனைப் பாதுகாத்தது. சூழ்நிலையைப் பயன்படுத்தி நாங்களும் நாலு சாத்து சாத்துவோமே என்று ஓடி வந்தவர்களின் கனவில் மண்ணள்ளிப் போட்டது.
இதற்கு முன்பு கூட அனீஸ் ஒருவனை காயப்படுத்தியபோது தனது வீட்டு டிரைவரை பொலீஸில் முற்படுத்தி அவன்தான் மோதினான் என்று காட்டி அனீஸ் தப்பித்துக் கொண்டுள்ளான்.
அப்பாவி டிரைவர் பொலிஸ் ரிமாண்டிலிருந்து நீதிமன்றம் சென்று குற்றவாளி என்று ஒப்புக்கொண்டு அபராத பணத்தை அனீஸின் தந்தை செலுத்த வெளியே வந்தான்.
இன்று வேறு யாரையும் கை காட்ட சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. நேரடியாகவே பொலிஸ் ரிமாண்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
அனீஸின் செல்போன் தகவல் கேட்டு அனீஸின ;தந்தை வக்கீலோடு பொலிஸ் நிலையம் வந்து விட்டார்.
இன்ஸ்பெக்டர் அனீஸின் தந்தைக்கு தெரிந்தவராக இருந்தும்கூட அவர் கையை விரித்து விட்டார்.
விபத்தில் அகப்பட்டவன் சாகக் கிடப்பதால் எந்த விதத்திலும் அனீஸை அவரால் வெளியே விட முடியாது என்று அவரது நிலையைக் கூறிவிட்டார்.
'என்ன செய்ய எனது மகனின் விதி' என்று மனங்கலங்கியவாறு அனீஸின் தந்தை ஸ்டேசனை விட்டு வெளியேறினார்.
3.
அன்று வெள்ளிக்கிழமையாய் இருந்ததால் அனீஸ் இரண்டு நாட்களை பொலிஸ் நிலையத்தில் கழிக்க வேண்டும். திங்கட்கிழமைதான் நீதிமன்றம் அழைத்துச் செல்வார்கள்.
'இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே. என்ன நடக்குமோ' என்று நெஞ்சு படபடப்புடன் அனீஸ் தவியாய் தவித்துக் கொண்டிருந்தான். இப்படி ஒரு நிலை தனக்கு வருமென்று அவன் கற்பனைக் கூட பண்ணியதில்லை.
இதையெல்லாம் எண்ணி நொந்தவனாக அமர்ந்திருந்த வேளை அவனுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான அதிர்ச்சி காத்திருந்தது.
வெளியே இருந்து வந்த இன்ஸ்பெக்டர் 'தம்பி உனக்கு நல்ல காலம். உனக்கு ஜாமீன்ல வெளிய போகலாம். அதுமட்டுமில்ல உனக்கு பெரிய பிரச்சினையும் இருக்கப் போறதில்ல' என்று கூறிக்கொண்டே போனார்.
தனது தந்தை காலையில் வற்புறுத்தியும் தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று கைவிரித்த இன்ஸ்பெக்டர் இப்போது எப்படி மனம் மாறினார்?
'வேறு பிரச்சினையும் இருக்கப் போறதில்ல' என்கிறாரே எப்படி?
அவனுக்குள்ளேயே பல கேள்விகள். அந்த கேள்விகளை இன்ஸ்பெக்டரிடமே கேட்டான்.
அதற்கு அவர் சொன்ன பதில் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
' நீங்க சரியாதான் கார ஓட்டிக்கிட்டு வந்தீங்களாம். அந்தப் பையன் மனக் குழப்பத்தில இருந்ததால திடீரென அவனே வந்து உங்க வாகனத்துக்கு முன்னால வந்து நின்னுட்டானாம். உங்க மேல எந்தக் குத்தமுமே இல்லையாம். அந்தப் பையன் மரண வாக்குமூலம் கொடுத்திருக்கான்.'
விக்கித்துப் போனான் அனீஸ்.
பொலீஸ் ஸ்டேஷனிலிருந்து அவனது கால்கள் வீட்டுக்குப் போகவில்லை. நேரே எக்ஸிடன்ட் வார்ட்டுக்குத்தான் அவனை அழைத்துச் சென்றன.
ஒரு மாதிரியாக சிரமப்பட்டு டாக்டரின் அனுமதியைப் பெற்று தான் முட்டி மோதிய வாலிபனைப் பார்த்தான். அவனோ பேசும் நிலையில் இருக்கவில்லை.
நீண்ட நேரம் காத்திருந்தான். அவனுக்கு சிறிது பேசும் நிலை வந்ததும் அவனது காதருகில் சென்று தன்னை அறிமுகப்படுத்தினான். தான்தான் அவனை முட்டி மோதியவன் என்றான்.
வேதனையோடு ஒரு புன்சிரிப்பு அவனது இதழ்களில் மின்னலாய் வந்து மறைந்தது.
4.
குற்றம் முழுவதும் எனது பேரில் இருந்தாலும் கூட பொலீஸிடம் அவ்வாறு கூறாமல் ஏன் பழியை தன் மேலே போட்டுக் கொண்டான். இதனைத்தான் அவ் வாலிபனிடம் கேள்வியாக கேட்டான்.
அதற்கு மிகவும் தட்டுத்தடுமாறி அவ் வாலிபன் கூறிய பதில் அவனை தூக்கி வாரிப்போட்டது.
'எனக்குத் தெரியும் என் மீது ஒரு குத்தமும் இல்லை என்று.
சும்மா வந்து கொண்டிருந்த என் மீதுதான் படு மோசமான வேகத்தோடு வந்து நீங்க கார ஏத்துனீங்க. அந்த சொற்ப வேளையில நீங்களும் என்னப் போல வாலிபன் என்பத தெரிஞ்சுகிட்டன். நான் நிச்சயம் பொழைக்க மாட்டேன். நான் கொடுக்கிற வாக்குமூலத்தால ஏன் என்னப்போல உள்ள ஒரு வாலிபன் வாழ்க்க நாசமா போகனும் என்று நெனைச்சன். அதனாலதான் வாக்குமூலத்தில இப்படி மாத்திச் சொன்னேன் '
திக்கித்திக்கி அவன் சொன்ன இந்த வார்த்தைகள் அனீஸை சம்மட்டியால் அடித்தன.
இறக்கும் தறுவாயிலுள்ள ஒருவனுக்கு இப்படியான மனநிலை இருக்க முடியுமா? தான் இறக்கின்ற போதும் மற்றவர்கள் வாழ வேண்டும் என்று நினைக்க முடியுமா? அவனது உயர்ந்த பண்பு அனீஸை நிலைகுலையச் செய்தது. தான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்க்கையை எண்ணி வெட்கப்பட்டான்.
'டொக்டர் எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்ல. பிரைவட் ஹோஸ்பிட்டலுக்கு அனுப்பியாவது இவன காப்பாத்துங்க'
ஒரு தீர்க்கமான முடிவோடு அனீஸ் டாக்டரிடம் மன்றாடினான்.
...................................................................................................................................................................................................................................................................................................

சனி, 23 மார்ச், 2019
சுடச்சுட
சுடச்சுட
~~~~~~~
---------------
நீ சுட்டாய்
அந்த சங்குகள்
வெண்மையாயின
நீ சுட்டாய்
New Zealand
New Zeal Landடாய்
(Zeal - பேரார்வம்)
தன்னைப்
பிரகடனப்படுத்திக் கொண்டது
நீ சுட்டாய்
அவர்கள்
தலையை மறைத்தார்கள்
உள்ளத்தை திறந்தார்கள்
நீ சுட்டாய்
அந்த மேனிகளில் மட்டுமா
துளைகள் விழுந்தன -
சொர்க்கத்தின்
கதவுகளிலும்தான் -
இலகுவாய்
அந்த ஆத்மாக்களை உள்ளே
இழுத்துக் கொள்ள
இத்தனை ஷுஹதாக்களை
சுவனத்துக்கு அனுப்பி வைத்த
உன்னை
நாளை
அந்த நரகில் போட்டு
சுடுவானா ?
மன்னித்து விடுவானா ?
- என். நஜ்முல் ஹுசைன்
23-03-2019
~~~~~~~
---------------
நீ சுட்டாய்
அந்த சங்குகள்
வெண்மையாயின
நீ சுட்டாய்
New Zealand
New Zeal Landடாய்
(Zeal - பேரார்வம்)
தன்னைப்
பிரகடனப்படுத்திக் கொண்டது
நீ சுட்டாய்
அவர்கள்
தலையை மறைத்தார்கள்
உள்ளத்தை திறந்தார்கள்
நீ சுட்டாய்
அந்த மேனிகளில் மட்டுமா
துளைகள் விழுந்தன -
சொர்க்கத்தின்
கதவுகளிலும்தான் -
இலகுவாய்
அந்த ஆத்மாக்களை உள்ளே
இழுத்துக் கொள்ள
இத்தனை ஷுஹதாக்களை
சுவனத்துக்கு அனுப்பி வைத்த
உன்னை
நாளை
அந்த நரகில் போட்டு
சுடுவானா ?
மன்னித்து விடுவானா ?
- என். நஜ்முல் ஹுசைன்
23-03-2019
புதன், 9 ஜனவரி, 2019
செவ்வாய், 8 ஜனவரி, 2019
கவிஞர் கலா விஸ்வநாதன்
வலம்புரி கவிதா வட்டத்தின் 55 வது கவியரங்கம் 22/12/2018 சனிக்கிழமை கொழும்பு ஐந்து லாம்பு சந்தி பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடாத்த கவிஞர் கலா விஸ்வநாதன் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் - என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்.
எல்லோரும் ஒன்றாக வே வாழ வேண்டு மென்றே
எந்நாளும் நினைக்கின்ற
ஏற்றமுடை மனதுடையான்
வல்லோனாய் தனைக் காட்டி
வார்த்தைகளில் விஷம் வைத்து
வஞ்சக மாய் தான் பேசி
யாரினதும் மனதுடையான்
மலையகத்து மக்கள் படும்
அப் பாட்டை தன் பாட்டாய்
கலையகத் தோடிவனும்
கவிதையிலே தான் வைத்தான்
விலைபோகும் அம் மக்கள்
விடுதலை யை தான் வேண்டி
சளைக்காதே அறைகூவி
சந்தர்ப்ப வாதிகளை
சொற்களினால் இவன் வைதான்
வலம்புரிக்காய் குரல் கொடுத்து
எம்மோடே இவன் இணைந்தான்
வலமாக இவன் நின்று
அன்று முதல் துணை வந்தான்
உளமார சொல்வதென்றால்
இவன் வியர்வை துளிகளுமே
களமாக இருந்தது வே
எம் வளர்ச்சிப் படிகளிலே
நெஞ்சகலா கவிஞனி வன்
எங்கள் கலா
விஸ்வ நாதன்
வஞ்சமிலா சொல்லெடுத்து
வந்து விட்டான்
தலைமை யேற்க
கவிஞனே கலா விஸ்வநாதனே
கவியரங்கை நீ நடத்து
எமை தந்திடவே உன்னிடத்து
நல்ல தமிழ் சொல்லெடுத்து
எம்மையெல்லாம் நீ கடத்து
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)