வலம்புரி கவிதா வட்டத்தின் 112 ஆவது கவியரங்கு 10/06/2025 அன்று நடைபெற்றபோது கவியரங்கத் தலைமையை ஏற்று நடத்த கவிஞர் பர்ஹாத் சித்தீக்குக்கு இவ்வாறு நான் அழைப்புவிடுத்தேன்
- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம்
(வகவம்)
சுறுசுறுப்பின் இலக்கணத்தை தன்னில் காட்டி
சுகமென்றே பொதுச்சேவை
தன்னை ஆக்கி
விறுவிறுப்பாய் செயல்புரிந்து
நிற்கும்இவனை
விருப்பமுடன் பாராட்டி
நிற்பர் பலரும்
அருவருப்பு என்பதனை என்றும் காட்டா
அன்பு மகன் எல்லோர்க்கும் இனியன்; உயர்ந்தோன் பொறுப்பெடுத்து பணியாற்றும்
இவனை இன்று
பெருமனதாய் நாமழைத்து தலைமை தந்தோம்
பொதுச்சேவை மட்டுமல்ல கவிதை என்னும்
பேராறில் மூழ்கிஇவன்
முத்தும் எடுப்பான். விதவிதமாய் வகவத்தின்
மேடை தன்னில்
வியப்பூட்டும் கவிதைகளால் உள்ளம் நனைப்பான்
இதமாக இவன் கவிதை இருக்கும் அதுபோல்
இதயத்தைப் பிழிந்தெடுக்கும் பொருளும் இருக்கும்
சதம்போட்டு கவியுலகில் நிலைத்து நிற்பான்
சாதிக்கும் இளையமகன் பர்ஹாத் சித்தீக்
கவிஞர் பர்ஹாத் சித்தீக்
இன்றெங்கள் கவியரங்கு நூற்றுபன் னிரண்டு
உன்றன் தலைமையிலே வடியட்டும் தமிழ்த்தேனும் திரண்டு
வரவேற்று நாம் தந்தோம் எம்மேடை இன்று
காட்டி நில்லு உன் புலமை எம்மனதை வென்று
- என். நஜ்முல் ஹுசைன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக